இலங்கைசெய்திகள்

மார்ச்சில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு – மஹிந்த தேசப்பிரிய!!

Mahinda Deshapriya

எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை.

எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும்.

நவம்பர் மாத நடுப்பகுதியின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button