இலங்கைசெய்திகள்

தேநீர் தயாரிக்க பயன்படுத்திய எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

Gas stove explosion

சம்பவ நேரத்தில் குறித்த எரிவாயு அடுப்பினை இயக்கி விட்டு வெளியில் சென்ற வேளை இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று(2) காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி 1 பகுதியில் குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.

வழமை போன்று தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை இயக்கிய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button