இந்தியாசெய்திகள்

மாமல்லபுரத்து நிலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!!

47 ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டுக்காக தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை வீதியில் உள்ள 5.29 ஹெக்டேர் நிலத்தை கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்க, கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது.

பல ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயற்படுத்தாததால் கையகப்படுத்திய உத்தரவை ரஇத்து செய்து, நிலத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரி உரிமையாளர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால் அதில் தலையிட முடியாது என தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்ட நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button