கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரே “ரேஸ் கோர்ஸ்” வாகனத்தரிப்பிடத்திற்கு அருகாமையில் இலவச வீதி நூலகம் (Street Library) ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதுவே இலங்கையின் முதலாவது வீதி நூலகமாகும்.
குறித்த வீதி நூலகம் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 2.3 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.