உலகம்செய்திகள்

பதவியிலிருந்து விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர்!

sweden

தனது கூட்டணிக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியதால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தான் பதவி விலகுவதாக சுவீடனின் முதல் பெண் பிரதமர் மக்டேலேனா ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

தாங்கள் முன்மொழிந்த வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவிக்கவில்லை என்ற காரணத்தால் க்ரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது.

மக்டேலேனா ஆண்டர்சனின் பதவி விலகலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கட்சி தலைவர்களிடம் ஆலோசிக்கப்படும் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து மக்டேலேனா ஆண்டர்சன் கூறுகையில் ‘நான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன். எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாமல் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன்.

அரசமைப்பின்படி கூட்டணியில் உள்ள ஒரு கட்சி விலகினால் மற்றொரு கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும். இந்த அரசாங்கம் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழும் அரசாங்கத்தை நான் வழிநடத்த விரும்பவில்லை’ என கூறினார்.

முன்னாள் நீச்சல் வீராங்கனையான மக்டேலேனா 1996ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அப்போதைய பிரதமரான கோரன் பெர்சனுக்கு அரசியல் ஆலோசகராக அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

கடந்த ஏழு வருடங்களாக நிதியமைச்சர் பதவி வகித்து வருகிறார். மக்டேலேனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக அதுவரை பெண் பிரதமர் இல்லாத ஒரே நாடாக சுவீடன் இருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button