விலை மலிவாகவும் சகல சத்துக்களும் உடையதுமான பழங்களில் ஒன்று எலுமிச்சை. இது அனைத்துவிதமான நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாகும்.
எலுமிச்சையில் அதிக கல்சியம் ,ஃபோலிக் அமிலம், மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. மேலும் விட்டமின் சி தவிர எலுமிச்சையில் கல்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன.
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி நன்றாக பிழிந்த சாறை ஒரு கிளாஸ் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்க வேண்டும். பின்னர் சிறிது குளிர வைத்து குடிக்க வேண்டும். அல்லது
ஒரு எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதில் ஒரு துண்டை கொதிக்க வைத்த கப் தண்ணீரில் சேர்க்க வேண்டும். குடிப்பதற்கு முன் சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
இவ்வாறு குடிப்பதால் எலுமிச்சை நீர் சருமத்தைப் பாதுகாக்கும். இது முதுமை நுண் கோடுகள் மற்றும் முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கும். சருமம் புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கொவிட் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாசக் கோளாறுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.
தினமும் எலுமிச்சை பழத்தை சுடு தண்ணீரில் பிழிந்து குடித்தால் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
குறிப்பு
அதிகப்படியான அளவு காலப்போக்கில் பல் பற்சிப்பியை சேதப்படுத்தும் மற்றும் துவாரங்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் கொதிக்கவைத்த எலுமிச்சை நீரை மட்டுமே அருந்தவும்.