இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மண்மேடு சரிந்ததில் தாயும் இரு பெண் பிள்ளைகளும் பலி, தந்தைக்கு பலத்த காயம் !

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேகாலை, ரம்புக்கணை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கியே குறித்த 3 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த தாயும், 8 வயது மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும்  உயிரிழந்துள்ளனர்.

தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button