இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தர பரீட்சையில் 2023ஆம் ஆண்டு முதல் கொரிய மொழி!!

Korean language

2023ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கொரிய மொழி ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொரியக் குடியரசின் பிரதிப் பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையுடன் தலைநகர் சியோலில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்களினால் இலங்கைக்குக் கிடைத்த நன்மைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இதேவேளை, கொரியக் குடியரசில் பணிபுரியும் 22 ஆயிரம் இலங்கையர்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் கொரிய மொழியின் புலமையை நோக்கமாகக் கொண்ட கற்பித்தல் நிகழ்ச்சிகளின் பிரபல்யம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்குப் பதிலளித்த பிரதிப் பிரதமர் யூ யூன் ஹை, இலங்கையில் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித் துறையில் முன்முயற்சிகளுக்கு விரிவான உதவிகளை வழங்குவது குறித்து கொரியக் குடியரசு பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button