55 வயதுடைய பெண்ணைக் கடத்தி 500,000 ரூபா கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார்.
இந்தச் சம்பவம் வவுனியா – வாரிகுட்டியூரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி பெண்ணைக் கடத்திய கும்பல் அவரது மகளுக்கு அழைப்பு எடுத்து ஐந்து இலட்சம் கப்பம் தருமாறும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செய்துள்ளனர்.
வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள இவர்கள் தொடர்பில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.