இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு முள்ளிவாய்க்காலில் அச்சுறுத்தல்!!

Journalist

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சியை மேற்கொண் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று முல்லைத்தீவு ஊடகவியலாளர் விஸ்வச்சந்திரன் (விஸ்வா ) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதை அறிந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் மீது இராணுவத்தினர் நடந்த தாக்குதல் சம்பவத்தை அறிக்கையிட வேண்டாம் என தெரிவித்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவரே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன், சம்பவத்தை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக புலனாய்வாளர்கள் வெவ்வேறு இலக்கங்களிலிருந்து தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும்  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button