ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு நிலைய அறிவிப்பின்படி, ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4:16 மணிக்கு பூமிக்கு 40 கி.மீ அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.