சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோமா நிலையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இன்று இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மகனின் வரவுக்காய் யாழ்ப்பாணத்தில் காத்திருக்கும் அவரது தாயார் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் மகனை நாட்டுக்கு வரவழைக்க மனு கொடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் சந்தன் உயிரிழந்துள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.