குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் அதற்காக தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் கலந்துரையாடியுள்ளார்.
இதன்மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.