தென்னிலங்கையில் இடம்பெற்ற விவாதப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மலைத்தென்றல் 2023 நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் விவாதப் போட்டியில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.
பதினைந்து பல்கலைகக்கழகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் பங்குபற்றிய “கருத்தாடல் 2023 ல் 24அணிகளுடன் சொற்போர் புரிந்து அவர்கள் வெற்றியை தமதாக்கியுள்ளனர்.
சொற்போரின் இறுதிச் சுற்று வரை முன்னேறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் அணியினர் இரண்டாம் நிலையைத் தக்கவைத்துள்ளனர்.
இப் போட்டியில் மோ.ஹரிஹரன்(தொழிநுட்ப பீடம்), ம.மோகனதாரணி(கலாசார சுற்றுலாத்துறை – கலைப்பீடம்) , தயா ராகவன் (விஞ்ஞான பீடம்) , சி.திஷான்(கலாசார சுற்றுலாத்துறை – கலைப்பீடம்) , சு.அஜித்குமார்(தொழிநுட்ப பீடம்) ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
போட்டியில் வெற்றியீட்டிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.