இலங்கைசெய்திகள்

உதைபந்தில் சம்பியன் ஆகியது யாழ். மத்திய கல்லூரி!!

Jaffna central college

நெல்லியடி மத்திய கல்லூரி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இப்போட்டி , 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போது சென்பற்றிக்ஸ் கல்லூரி அணியுடன்  இறுதிப்போட்டியில் மோதிய மத்திய கல்லூரி  அணி சிறப்பாக விளையாடி சம்பியனாகியது.

போட்டியில் இரண்டாம் இடத்தினை சென்பற்றிக்ஸ் கல்லூரியும் மூன்றாம் இடத்தினை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியும் பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்பற்றிக்ஸ் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி,இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாகல்லூரி, தேவரையாளி இந்துக்கல்லூரி, ஹாட்லிக்கல்லூரி, உடுத்துறை மகாவித்தியாலயம்  ஆகிய பாடசாலைகள் பங்குபற்றின.

Related Articles

Leave a Reply

Back to top button