கோட்டைப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கை!!
Jaffna
யாழ்ப்பாணம். கோட்டை பகுதியில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கோட்டையில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ்.மாநக சபையினர், தொல்லியல் திணைக்களத்தினர் , நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து துப்புரவுப் பணிகளைச் செய்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம். கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவோர் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழிக்க நேரிடும் என தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண புனர்நிர்மாணப் பொறுப்பதாகாரி பாலசுப்பிரமணியன் கபிலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். கோட்டை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. இங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தொல்லியல் மையத்துக்கு சேதம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு சட்டத்தின் பிரகாரம் பிணை கிடையாது. தூய்மைப்படுத்தல் பணி நிறைவடைந்ததும் இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.