எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடம், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்றினை 2015ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வருடாந்தம் நடாத்தி வருகின்றது.
‘உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக வளர்ந்து வரும் பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்கள்’ என்ற தொனிப் பொருளில் இந்த ஆய்வுமாநாடு இடம்பெறவுள்ளது.