இலங்கைசெய்திகள்

ஆணொருவரின் சடலம் யாழ். கோவளம் கடற்கரையில் கரையொதுங்கியது!!

யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இது இந்தியாவின் வேதாரண்யத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது படகிலிருந்து தவறி வீழ்ந்து காணாமற்போனவரின் சடலம் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

யாழ். காரைநகர் கோவளம் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியமை தொடர்பில் பிரதேச மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது தமிழகத்தின் வேதாரண்யம் – ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவருடையது என இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

வேதாரண்யத்திற்கு அப்பாலுள்ள கடலில் மீன்பிடியில் ஈடுட்டபோது படகிலிருந்து தவறி வீழ்ந்த மீனவர் தேடப்பட்டு வந்ததாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button