யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான 2 பிள்ளைகளின் தாய் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையின் தரம் 5 ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார்.
மேற்படி பெண் வடமாகாணத்தின் உயர்நிலை அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர் தனது பிள்ளைக்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வீட்டிற்கு வந்து பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவரை அழைத்துள்ளார். அவரும் தொடர்ச்சியாக வீட்டில் வந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பிள்ளைக்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஆண் ஆசிரியர் தான் கல்வி கற்பிக்க வந்த பிள்ளையின் தாயுடன் தலைமறைவாகியுள்ளார்.
கற்றோரின் இத்தகைய செயற்பாடுகள் வருங்கால சந்ததிக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.