“தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை “தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் – நல்லை ஆதீன முன்றலில் தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள உண்ணாவிரத மற்றும் கையெழுத்துப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சார்ந்த தேசிய அமைப்புகள், சமய சமூக தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.