இலங்கைசெய்திகள்

இறைவனிடம் சேரந்த அன்பழகனின் ஆத்மாவை நினைத்தாலே  பிள்ளைகள் நற் பிரஜைகள் ஆவார்கள் – யாழ் இந்து ஆரம்ப பாடசலை அதிபர் தெரிவிப்பு!!

Jaffna

 மறைந்த புலமைச்சிகரம் வே. அன்பழகனால் தாபிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவரகளின் அறிவுக்கூடமாக விளங்கிய சாதனையாளர்களின் உருவாக்க களமாக இருந்த அன்பொளி கல்விநிலையம் அவரின் திடீர் இறப்புடன் சற்று தளர்வடைந்து இருந்தாலும் மறைந்த நல்லாசானின் வழிதோன்றல்களின் உதவி, ஆசிரியர்களின் முயற்சினால் தொடரந்தும் கல்விநிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது .

அங்கு தற்போது தரம் 5 மாணவர்களுக்கு   திரு. பத்மநேசன் , திரு. தீபன் ஆகிய பிரபல ஆசிரியர்கள் கற்பித்து சிறப்பான வழிகாட்டலை வழங்கி வருகின்றனர். 

அந்த வகையில்,  கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத்   தோற்றிய மாணவர்களில் 60 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர். 

இவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன் தினம்  ( 2/4/23) பிற்பகல் 3 மணிக்கு 70/4 அரசடி வீதி,  யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள அன்பொளி கல்விநிலையத்தில் இடம்பெற்றது. 

    இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற  யாழ் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் சு . தியாகலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்று  சிறப்புரை ஆற்றிய போது மேற்படி கருத்தைக் கூறினார்.  இந்த நிகழவில் 40க்கு மேற்பட்ட புலமைப்பரிசில் சாதனையாளர்கள் பரிசிலும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

Related Articles

Leave a Reply

Back to top button