இலங்கைசெய்திகள்

வர்த்தகர் ஒருவர் மீது யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!!

jaffna

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று (08) முற்பகல் 11.30 அளவில் இந்த வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சம்பவத்தில் காயமடைந்த 33 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button