யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடிதம் மூலம் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அவர் இதனைத் தெரியப்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.