இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் பேரணியின் பங்கேற்பாளரும்!!

island of Diego Garcia

இலங்கையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட தமிழ் மீனவர் ஒருவரும் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த கடற்படைத் தளத்தில் குறைந்தது 89 ஈழத் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் மத்தியிலேயே குறித்த தமிழ் மீனவரும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வடக்கில் நிறைவு பெற்ற இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் பேரணியில் பங்கேற்றவர்களை இலங்கை அரசாங்கம் பலமுறை துன்புறுத்தியதை அடுத்து குறித்த மீனவர் தமிழகத்துக்கு சென்றுள்ளார் என்றும் குறித்த ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்து தமிழகத்தில் தங்கியிருந்த ஏனைய தமிழ் ஏதிலிகளுடன் சேர்ந்து கனடாவுக்கு செல்ல முயன்றபோதே ,கடலில் மீட்கப்பட்டு அவர் தற்போது டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 20 குழந்தைகள் உட்பட குறைந்தது 89 ஈழத் தமிழர்களும் உள்ளனர் என்பதை இங்கிலாந்து அரசாங்கம் அண்மையி;ல் உறுதிப்படுத்தியுள்ளது,

எனினும் அவர்கள் அடுத்து எங்கு மாற்றப்படுவார்கள் என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் வழங்கவில்லை.

இவர்கள் கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button