இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைப், பாதுகாக்கும் நோக்கில் இந்தியா புதுடில்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்…பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்,தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக… கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.
மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் எனக் கருதப் படுவதால் இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்கவே இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இன்று மாலை, இந்திய போர் கப்பலான “விக்ரமாதித்யா”, 4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில். ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை இலங்கையின் இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் – வேங்கை மைந்தன்.