ஹெரோயின், கொக்கேன் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும் சாரதிகளை தேடும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மாதம் இடம்பெற்ற 39 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களில் முச்சக்கர வண்டிகள் முன்னணியில் உள்ளதாகவும், அந்த வரிசையில் பேருந்து மற்றும் உந்துருளிகளும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் இடம்பெற்ற 1,875 சாலை விபத்துக்களில், 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,473 பேர் உயிரிழந்துள்ளனர்.