இலங்கைசெய்திகள்

ரயில் சேவைகள்  வழமைக்கு திரும்பின!!

Railway service

 புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்று வழமையான நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்களத்தின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு ஊழல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நிலைய அதிபர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் நல்ல பதிலை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button