இலங்கைசெய்திகள்

வெளியானது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை!!

IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடங்குகிறது.

அந்த அறிக்கையில், கொவிட்-19 இலங்கயைின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இழப்பு மற்றும் பல கடுமையான முடக்கங்கள் தேவைப் பட்டன.

கொவிட்-19 இன் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயம், சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்துதல், பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அறிக்கை கூறுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button