தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற தம்புலு ஓயா பகுதியைச் சேர்ந்த லலிதா பத்மி, தான் அனுபவித்த இன்னல்கள் குறித்து தகவல் வழங்கியுள்ளார். இவர், டுபாயில் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அண்மையில் நாடு திரும்பினார்.
டுபாயில் உள்ள தடுப்பு முகாமில் 85 இலங்கைப் பெண்கள் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அங்கு பல வன்முறைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பெண், தாம் அனுபவித்த விரும்பத்தகாத அனுபவங்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தம்புள்ளை காவல்துறை மற்றும் வெளிநாட்டில் உள்ள வேலை முகவரகத்தில் தெரிவித்த போதிலும் இதுவரை தமக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் தம்புள்ளையில் உள்ள குறித்த தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் டுபாய்க்கு அனுப்பப்பட்ட குறித்த பெண்ணின் சகோதரியும் டுபாயில் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.