இலங்கைசெய்திகள்

இலங்கையில் 12 ஆயிரம் உணவகங்கள் மூடல்!!

hotal closed

“எரிவாயு நெருக்கடி, பால்மா மற்றும் மரக்கறி தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் 12 ஆயிரம் வரையிலான ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.”

  • இவ்வாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் பலவும் இவ்வாறு மூடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று நகர் பகுதிகளில் வீதியோரங்களில் நடத்திச் செல்லப்படும் வடை, கடலை கடைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செய்தியாளர் சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button