இலங்கைசெய்திகள்

சமையல் எரிவாயு தொடர்பில் ஆராய்வு!!

gas cylinder

சமையல் எரிவாயுவுடன் தொடர்புடையதாக தீப்பரவல் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வினை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினர் சென்று இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகின்றன.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு மாதிரிகளை பரிசோதிக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏழு மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள சமையல் எரிவாயு மாதிரிகளும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button