இலங்கைசெய்திகள்

தரம் – 5 புலமைப்பரிசில் சாதனையாளர் கெளரவிப்பு விழா – 2022!! { படங்கள் இணைப்பு}

Honors Ceremony

2022 ஆண்டுக்கான மட்டுவில் வடக்கு அ .த.க பாடசாலை தரம் 5 புலமைப் பரிசில் சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா 01.06.2022 புதன்கிழமை {நேற்று }யா/மட்டுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திருமதி. த. அம்பிகைபாகன் தலைமையில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. த. கிருபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. வ. நடராசா அவர்களும் கௌரவ விருந்தினராக மட்டுவில் மோகனதாஸ் சனசமூகநிலைய தலைவர் திரு. சு. சுதாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் மோகனதாஸ் சனசமூக நிலையம் மற்றும் மோகனதாஸ் ஐரோப்பா கிளை இணைந்து உருவாக்கியுள்ள “மோகனதாஸ் புலமைப்பரிசில் திட்டம்” எனும் உதவிக்கரத்தின் மூலம் 2020, 2021 புலைமைப்பரிசில் பரீட்சையில் பங்கு பற்றிய 27 மாணவர்கள் பெறுமதியான
பணப்பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மோகனதாஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பரீட்சையில் சித்தியடையும் மற்றும் பாடசாலையில் இருந்து தரம் 6 இற்குச் செல்லும் மாணவர்கள் வருடாந்தம் கெளரவிக்கப்படவுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மோகனதாஸ் ஐரோப்பா கிளையினர், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், ஆசிரியர்கள், விழா ஏற்பாட்டாளர்களான பழைய மாணவர் அமைப்பினர், மோகனதாஸ் நிர்வாகிகள், பிரதம விருந்தினர் மற்றும் ஏனைய விருந்தினர்கள் , நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோர்கள் என அனைவருக்கும் தமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button