மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஜனாதிபதியின் சிந்தனையில் உதித்த சமுர்த்தி செளபாக்கியா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைத்து பயணாளிகளிடம் கையளிக்கும் நடவடிக்கை இடம் பெற்றுவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சமுர்த்தி செளபாக்கியா வீடு புதன்கிழமை(22) திறந்து வைக்கப்பட்டது.
மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் மேற்பார்வையிலும் ஆலோசனையிலும் இந்த வீடு திறந்து வைக்கப்பட்டது.
இந்த வீட்டை திறந்து வைத்த நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பாத்தும்மா பரீட் சமுர்த்தி சமூக அபிவிருத்தி திட்ட உதவியாளர் எம்.ஜூனைதீன் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கள் கலந்து கொண்டனர். குறித்த வீடு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவியுடன் பயணாளியின் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி பங்களிப்புடன் மூன்றரை இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.