கனடாவைச் சேர்ந்த துஷ்யந்தன் தவறி தம்பதிகளின் அன்பு மகள் பவிஷாவின் பத்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓட்டிசம் (Autism)குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 5 பேரிற்கு தலா பத்தாயிரம்(10000)ரூபா வீதம் வழங்கியுள்ளனர்.
இவர்கள், தமது மகளின் பிறந்த நாளான இன்று இவ்வாறு விசேட தேவையுடைய குழந்தைகளைத் தெரிவு செய்து இவ்வாறு உதவி வழங்கியமை மிகவும் பாராட்டிற்குரிய விடயமாகும்.
யுத்தப்பாதிப்பினை எதிர்கொண்டு குறைபாட்டோடு வாழும் சிறார்கள் பலர் அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலையே உள்ளது.
இந்நிலையில் இவ்வாறு சமூகப்பற்றோடு, தமது மகிழ்வில் பிறரையும் மகிழ்வித்த கனடா வாழ் குடும்பத்தினரை பலரும் பாராட்டியுள்ளனர்.
உதவி பெற்றவர்கள் தமது வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.