இலங்கைசெய்திகள்

பவளவிழா ஞாபகார்த்த கற்றல் உபகரணம் வழங்கல்!!

help

சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்
பொண் கந்தையாவின் பவள விழா ஆண்டை நினைவு படுத்தும் முகமாக அவரது பெயரில் 10 லட்சம் ரூபா செலவில் அவரின் பிள்ளைகளால் தென்மராட்சியில் பல சமூக நல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் இரண்டாவது கட்டமாக இன்றைய தினம் 01.12.2021 புதன்கிழமை வளர்மதி கல்விக்கழக பொறுப்பாசிரியர் ச. கிருஷ்ணன் தலைமையில் உதவி வழங்கல் நிகழ்வு மற்றும் தேனீர் விருந்துபசாரம் என்பவை இடம்பெற்றது.

150 மாணவர்களுக்கு தலா 800 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் அதே பெறுமதியில் 20 முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் 25 ஆசிரியர்களுக்கு தலா 750 ரூபா பெறுமதியான ஊக்குவிப்பு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கல்விக்கழக உறுப்பினர்கள் கிளை நிலைய உறுப்பினர்கள் என சுமார் 250 பேருக்கு தேநீர் விருந்துபசாரமும் நடைபெற்றது.

காலத்தின் தேவையறிந்து கொடுக்கும் இவ் உதவிகளின் காரணகர்த்தா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button