லண்டனில் வசிக்கும் Pirapa – Thenu தம்பதிகள் தமது மகன் ஆதீசின் பிறந்த தினத்தை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்ட மற்றும் தெரிவு செய்யப்பட்ட
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சிலரிற்கும் உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
பொருட்களின் அதிக விலையேற்றத்தினால் நாளாந்தம் கூலி வேலை செய்யும் குடும்பங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
இவ் உதவியானது மிகத்தேவையானதொன்றாகவே அமைந்துள்ளது.
உதவி பெற்றவர்கள் தமது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய முன்வந்த இத்தம்பதிகளைப் பாராட்டுவதுடன் நன்றியையும் தெரிவிக்கும் அதே வேளை சமூக ஆர்வலர்களும் அவர்களது மகனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தகவல் – பிரபா அன்பு