மேல் மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில், இவ்வாறு மழை பெய்யக்கூடும்.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையுடனான வானிலை, நாளைய தினத்தின் பின்னர் குறைவடையக்கூடும் என்றும், பின்னர் அடுத்த வாரத்தின் இறுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.