கடந்த 8 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக கைவிடுவதற்கு சுகாதார தொழிற்சங்க சம்மேளம் தீர்மானித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பினை கைவிடுவதா? இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக நிறைவேற்றுக்குழு இன்று பிற்பகல் கூடியிருந்தது.
அதன்போது, பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாளைய தினம் சுகாதார சேவைகள் வழமைக்கு திரும்பும் என சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.