ஹஜ் புனித யாத்திரைக்கு ஒரு மில்லியன் யாத்திரிகர்களை அனுமதிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கொவிட்-19 காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்ட தடைகளை இம்முறை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்கா – ஹஜ் புனித யாத்திரைக்கு வருபவர்கள் 65 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 முழுமையான தடுப்பூசி பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அண்மையில் பெறப்பட்ட கொவிட்-19 பரிசோதனை அறிக்கை வைத்திருக்கவேண்டும் எனவும் தெலிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கும் மேற்படி விதிமுறைகளுடன் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.