கல்வி

ஐவின்ஸ்தமிழ் .கொம் [ivinstamil.com]இணையதளம் நடாத்தும் மாபெரும் தரம் 5 புலமைப்பரிசில் இலவச கருத்தரங்குத் தொடர்!!

Grade 5 exam

ஐவின்ஸ்தமிழ் .கொம் [ ivinstamil.com] இணையதளம் நடாத்தும் மாபெரும் தரம் – 5 புலமைப்பரிசில் இலவச கருத்தரங்குத் தொடர்!!

ஐவின்ஸ்தமிழ் .கொம் [ivinstamil.com] இணையதளமானது மாணவர்களின் நலன் கருதி புலமைச்சுடர் கையேட்டின் ஆரம்பகால முன்னணி ஆசிரியர்களை இணைத்து முற்றிலும் இலவசமான மாபெரும் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்குத் தொடர் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

மேற்படி கருத்தரங்கானது 24.12.2021 – 03.01.2022 வரையான பத்து நாட்களும் பகுதி 1, பகுதி 11 எதிர்பார்க்கை வினாத்தாள்களைக் கொண்டதாக நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் இலங்கையின் அதிமூத்த முன்னணி புலமைப்பரிசில் ஆசிரியர் திரு. பொ. அம்பிகைபாகன், யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய ஆசிரியர் திரு. என்.எஸ். தீபன், யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் திரு. சண் சுதர்சன், திருகோணமலை இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு. ஆ. ஜெயநேசன், கொழும்பு. சென்லூசியஸ் கல்லூரி பிரதிஅதிபர் திரு. து. திலிப்குமார் ஆகியோர் வளவாளர்களாக இணையவுள்ளனர்.

இணைந்துகொள்ள விரும்பும் இலங்கை பூராகவுமுள்ள மாணவர்கள் 076 8623472 என்னும் எமது தொடர்பு தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப்பில் மாணவர்களின் பெயர், பாடசாலை மற்றும் குழுமத்தில் இணைக்கவேண்டிய உங்கள் வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் என்பவற்றை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாளாந்த அமர்வாக நடாத்தப்படவுள்ள இக்கருத்தரங்கில் அதே நேரங்களில் இணைந்துகொள்ள முடியாதவர்கள் எமது வட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து வினாத்தாள்களையும் புள்ளியிடல் விபரத்தினையும் இணையதளத்தில் பிரதி எடுத்து பயிற்சி செய்யலாம் என்பதையும் பெற்றோர்களுக்கு அறியத்தருகின்றோம்.

எமது வட்ஸ்அப் குழுமத்தில் இணைவதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

Related Articles

Leave a Reply

Back to top button