இலங்கைசெய்திகள்

மாதகல் காணி விவகாரம் – வடமாகாண ஆளுநரின் அறிவிப்பு!!

Governor of the Northern Province

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, மாதகல் காணிகளை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குவதாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை மாதகல் காணி உரிமையாளர்களை சந்தித்திருக்கவில்லை எனவும் இன்றைய தினமே நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button