இலங்கைசெய்திகள்

அதிபர் , ஆசிரியர் சேவை- வெளியானது அதிவிசேட வர்த்தமானி!!

goverment gazette

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன், இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்றும் ‘அகப்படுத்தப்பட்ட சேவைகளாக’ பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அகப்படுத்தப்பட்ட சேவை அறிவித்தலானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலாகுவதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள், அந்தந்த சேவைகளுக்காக தற்போது அமுலில் உள்ளவாறு தொடர்ந்தும் நடைமுறையாகும்.

குறிப்பிட்ட சேவைகளுக்கான விசேட வேதன முறைமை தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வினவி, பொருத்தமான வகையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button