மாற்றங்கள் ஒருபோதும் வலியை ஏற்படுத்துவதில்லை உறவுகளே…!
மாற்றத்திற்கான எதிர்ப்பு மட்டுமே வலியைத் தருகிறது……பலவேளைகளில்,
எமது பிள்ளைகளின் மனதின் விருப்பங்களை (கல்வியாக இருக்கட்டும்,திருமணமாக இருக்கட்டும்) எம்மால் உணரமுடிவதில்லை……!
எம்முடன் கூடப் பயணிப்பவரின் மனதின் தேவைகள் எம்மால் உணர முடிவதில்லை…..!
உறவுகளில்…….அவர்கள் சொல்லி நாம் என்ன கேட்பது….!! நாம் சொல்வதைக் கேட்க வைப்பதில் அதிக பிரயத்தனம்……!
நன்கு சிந்தித்தால் மாற்றங்கள் வலியைத் தருகின்றனவா…..?
அல்லது அதற்கு நாம் காட்டும் எதிர்ப்பு வலியை தருகின்றதா என்பது எமக்கே புரியும்.
பல வேளைகளில் நாம் அற்புதமான விடயங்களை சந்திப்பதற்கு, மிகக்கடினமான பாதைகளினூடே பயணம் பண்ண வேண்டியிருக்கும் உறவுகளே……
Leave a Reply