உலகம்செய்திகள்

நியூஸிலாந்தில் நில அதிர்வின் போதும் செய்தியாளர் சந்திப்பை நடத்திய பிரதமர்

நியூஸிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் நில அதிர்வு உணரப்பட்ட வேளையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கலக்கமடையவில்லை. மாறாக ஒரு சிறு பதற்றத்தைத் தொடர்ந்து தமது செய்தியாளார் மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக வெலிங்டனும் அருகில் உள்ள பகுதிகளும் திங்கட்கிழமையன்று அதிர்வை உணர்ந்தன.

இதன்போது செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த பிரதமரும் அதிர்வை உணர்ந்தவராக சிறுபதற்றத்தை வெளிக்காட்டினார்.

எனினும் தமது செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்துள்ளார். இதேவேளை வெலிங்கனிலும் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட 5.9 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. நியூஸிலாந்தில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன.

2011இல் கிறிஸ்ட்சேர்ச்சில் 6.3 ரிக்டர் அளவு நடுக்கம் ஏற்பட்டது. இதன்போது 185 பேர் கொல்லப்பட்டனர். 2016 இல் தென் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button