மலேசியாவில் கினபாலு மலையின் படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மலை மீது சூரிய ஒளி விழுவதைக் காட்டும் அந்தப் படம் மலை மீது தங்க வளையம் இருப்பதைப் போல் தோன்றுகிறது.
அதிகாலை 6 மணிக்குச் சூரியன் உதயமாகியபோது படத்தை எடுத்ததாக 23 வயது டேவரொன்ட் டோலியஸ் (Daverond Dolius) சொன்னார்.மலையேறிகளுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றும் அவர் Gurkha Hut மலை உச்சியிலிருந்து படத்தை எடுத்தார்.
அந்த அழகான படம் சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.அதைப் பார்க்க கடல் நாகத்தைப் போலவும் சங்கிலியைப் போலவும் தெரிவதாக இணையவாசிகள் கூறினர்.