வவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடு ஒன்றில் இன்றைய தினம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதுடன் வெடிப்பு அனர்த்தம் வீட்டு உரிமையாளரின் முன் ஆயத்த நடவடிக்கையினால் அடுப்பு வெடிப்புச் சம்பவம் சேதம்ங்கள் என்பனவும் தவிர்க்கப்பட்டுள்ளது .
வவுனியா பண்டாரிக்குளம் உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வரும் ஒருவர் இன்றயை தினம் காலை எரிவாயுவை பரீட்சித்துப்பார்த்துப் பொருத்தும் நடவடிக்கையை மேற்கொண்டபோது அதில் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது .
இதையடுத்து குறித்த எரிவாயுவை பொருத்தும் நடவடிக்கையை கைவிட்டு 1311 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி தகவல் வழங்கியுள்ளார் . இதையடுத்து கசிவு ஏற்படும் எரிவாயுயை கொடுத்து பிறிதொரு எரிவாயுவைக் கொள்வனவு செய்யுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது .
நாட்டில் தற்போது வரையும் 850 இற்கும் மேற்பட்ட எரிவாயு வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகியுள்ளது . எனினும் எவரும் முன் ஆயத்த நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றவில்லை இதனால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டு சில உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளது . எரிவாயு வெடிப்புச்சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்குப் போதிய வழிப்புனர்வுகள் வழங்கப்படவில்லை . இதனால் வெடிப்புச்சம்வங்கள் இடம்பெற்று வருகின்றது . எரிவாயு கொள்வனவு செய்யும் ஒருவர் அதனைப்பரீட்சித்துப் பார்த்து அடுப்பில் பொருத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும்போது இடம்பெறவுள்ள அனர்த்தங்கள் சேதங்கள் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .