இலங்கைசெய்திகள்

எரிவாயு விவகாரம்- களத்தில் இறங்கிய பெண்கள்!!

Gas cylinder

எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்களுக்கு எதிராகவும், பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருள் “கொலைகார எரிவாயு சிலிண்டர்களை திரும்ப பெறு, “இழப்பீடு கொடு, மற்றும் “அத்தியாவசிய பொருட்களின் விலையை குறை போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

அதேவேளை நிறுவனங்களின் நலனுக்காக இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களின் உயிர்களை அரசாங்கம் பலிகொடுத்துள்ளதாக சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , பொதுமக்களுக்கு பாதுகாப்பான எரிவாயுவை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாரும் அவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button