இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கரைச்சி பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1299 ஏக்கர் நிலப்பரப்பு வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக பிரதேச செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யுத்த காலத்தில் கைவிடப்பட்டதன் காரணமாக 1299 ஏக்கர் நிலப்பரப்பு வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலையில், குறித்த 600 ஏக்கர் வரையான வயல் காணி வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு பயிர் செய்கை நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் வன்னேரிக்குளம் பகுதியில் 549 ஏக்கர் காணிகளும், மலையாளபுரம் பகுதியில் 100 ஏக்கர் காணிகளும், கிருஷ்ணபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா 25 ஏக்கரும் என 1299 ஏக்கர் நிலப்பரப்பு வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேற்படி காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button