எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!!
ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கால இடைவெளியில் 7,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய பாரிய கப்பல் ஜூலை 10 ஆம் திகதிக்கு பின்னர் மாலைதீவு கடற்பரப்பை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலம் தொடர்ந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்
*இம்மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் தினமும் 12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அதுவரை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.