எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் பலர் பகல் நேரத்தில் மாத்திரமல்லாது இரவு நேரத்திலும் வரிசைகளில் நிற்பதை அதிகளவில் காணக் கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பெற்றோலை கொள்வனவு செய்ய சென்றிருந்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சிலாபம் பிரதேசத்தில் இரவு நேரத்தில் எரிபொருள் வரிசையில் இருந்த பெண்ணொருவர் இளைஞர் ஒருவருடன் சில மணி நேரங்களை கழித்தன் காரணமாக கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
வரிசையில் நின்றிருந்த கணவனை தந்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள பெண் இரவில் வரிசையில் இருந்துள்ளார்.
வீட்டுக்குச் சென்ற கணவன் எரிபொருள் வரிசைக்கு திரும்பி வந்த போது அங்கு மனைவி இருக்கவில்லை.
இதனையடுத்து தேடிப்பார்த்ததில் மனைவி, எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவருடன் ஓரிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த இடத்திற்குச்சென்ற கணவன் மனைவியைத் தாக்கியுள்ளதுடன் எரிபொருளைக் கொள்வனவு செய்யாது வீட்டுக்குத் திரும்பிச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.